எத்தனையோ நல்ல விசயங்கள் இந்தியாவில் நடக்கும் பொது, பல விசயங்கள் கவனிப்பாரின்றி, மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது. செய்யவேண்டியவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். என் கோபம் எல்லாம் இதை செய்யாமல் அவர்கள் வேற என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மா-மனிதர்கள்?

Saturday, November 14, 2009

ரங்கநாதன் தெருசுத்தம் செய்யுங்கள் குப்பைகளை அகற்றுங்கள்.

ரங்கநாதன் தெரு. சென்னை மக்களுக்கும், சென்னை சுற்றி உள்ள புறநகர் மற்றும் கிராம மக்களுக்கும் ரொம்ப பழக்கப்பட்ட தெரிந்த ஒரு இடம். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம். இதனால் அங்குள்ள சில கடைகாரர்களுக்கு(மனிதர்களுக்கு) கோடிகணக்கான ருபாய் வருமானம். காலையில் இருந்து இரவு 10 , 11 மணிக்கு வரையும் வியாபாரம். அந்த தெருவில் எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்கள், மேடு பள்ளம், சாக்கடைகள் சரியாக மூடாமல், சாக்கடைகளின் கழிவுகள் நடைபாதையில் கொட்டி இருப்பது, தண்ணீர் தேங்குவது என ஏராளம். அங்கு உள்ள கடைகாரர்கள்/வியபாரிகள், வரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, அதை ஒன்று அல்லது இரண்டு ஆட்கள் வேலைக்கு வைத்து அந்த தெருவை ஏன் சுத்தமாக வைக்க கூடாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வரும் இடத்திற்க்காக, இதை கூட ஏன் செய்ய கூடாது. இரவில் மாநகராட்சி துப்புரவாளர்கள் வரும் வரை -அந்த தெரு நாற்றம் அடித்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?. அந்த தெருவில் உள்ள பெரிய கடைகார்கள் சிந்தித்து இதை நிறைவேற்றுவார்களா அங்கு வரும் மக்களுக்காக?

No comments:

Post a Comment