எத்தனையோ நல்ல விசயங்கள் இந்தியாவில் நடக்கும் பொது, பல விசயங்கள் கவனிப்பாரின்றி, மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது. செய்யவேண்டியவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். என் கோபம் எல்லாம் இதை செய்யாமல் அவர்கள் வேற என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மா-மனிதர்கள்?

Sunday, October 4, 2009

அதிகமாக முன்பதிவு செய்யாத (unreserved) பெட்டிகளை விடவும்:

வார இறுதி நாட்களில் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது இந்தியாவில் எல்லா ஊர்களிலும் நடக்கிறது. இருக்கிற மூன்று அல்லது நான்கு பெட்டிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் ஏறுகிறார்கள், உட்கார, நிற்க இடம் இல்லை. ஏன் இந்த அவலம். குறைந்தது வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பெட்ட்களை ஏன் இணைப்பதில்லை. முன்பதிவு செய்யாமல் போகும் மனிதர்கள், மனிதர்களாக தெரியவில்லையா?. இரயில்வேயில் இருக்கும் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகாலும், இந்திய அரசியல் அமைப்பைக் கட்டி பாதுக்காக்கும் மாமனிதர்களும், முன்பதிவு செய்யாத பெட்டிகளில் சென்று, அதன் வேதனையை உணரவேண்டும்.

No comments:

Post a Comment